Showing posts with label ஆலமரம். Show all posts
Showing posts with label ஆலமரம். Show all posts

Friday, March 5, 2010

ஆலமர உச்சியில்
அப்பா
அரசமர உச்சியில்
அவர்

ஆடிக் காற்றில்
மரமே விழுந்தாலும்
அப்பா விழமாட்டார்

ஆயிரம் முறை
சுற்றி வந்தாலும்
அவர் மரமிறங்க மாட்டார்

நல்லவேளை
எனக்கு மரமேறத்
தெரிந்திருக்கிறது.