Sunday, March 21, 2010

அடுப்படி அவஸ்தை

வெங்காயம் அரியும்போது
கண்கள் எரிந்தும்
கண்ணீர் வரவில்லை.

கறிகாய் நறுக்கும்போது
கையையும் நறுக்கி
இரத்தம் வடிந்தும்
கண்ணீர் வரவில்லை.

தேங்காய் உடைக்கும்போது
கீரல்களுக்கிடையே மாட்டிய விரல்
வீங்கியபோதும்
கண்ணீர் வரவில்லை.


ஈரக் கையால்
மிக்சியைத் தொட்டு
மசாலா அரைக்கும்போது
ஷாக் அடித்தும்
கண்ணீர் வரவில்லை.

கொதிக்கும் குழம்பை
ருசிபார்த்த போது
நாக்கு வெந்தும்
கண்ணீர் வரவில்லை.

இத்தனை
அடுப்படி அவஸ்தைகளையும்
ஓரங்கட்டி,
பார்த்துப் பார்த்துச்
சமைத்த உணவை
ருசிக்காமல் –
விமர்சிக்காமல்

டிவி பார்த்துக் கொண்டே
விழுங்கினீர்களே!

அப்போது
வடிந்தது கண்ணீர்,

மனதிலிருந்து!

6 comments:

  1. சொல்லவந்த விசயம் - சிறப்பு

    வேக வாழ்வில், விளையாட்டாய் செல்கிறது ஒவ்வொரு நிகழ்வுகளும் வெவ்வேறு விதங்களில் ரணங்களை உருவாக்கியபடி...!

    ReplyDelete
  2. Un paiyyan than appo appo nee samikirathuku command kudukuranae...

    ReplyDelete
  3. நன்றி ஆயில்யன்

    ReplyDelete
  4. This comment has been removed by the author.

    ReplyDelete
  5. கவிதை .கவிதை கவிதை படி...

    இடை இடையே மானே தேனே பொன்மானே
    போட்டுகுங்கே...
    ம்ம்ம் படிங்க...

    ஒகே...

    ReplyDelete
  6. nalla yatharthama supera irukku...........

    ReplyDelete